Go beyond from mind - OSHO

அறிவின் மாணவன் தினமும் கற்றுக் கொள்ள நினைக்கிறான் ... தாவோவின் மாணவன் தினமும் கற்றதைக் கழித்துவிட நினைக்கிறான் ... அதிகமாக தெரிந்து கொள்ளும் ஒருவன் தன்னுடைய இருப்பை இழக்கிறான் ... அவன் ஒரு தகவல் குப்பையாகிப் போகிறான் ... தாவோவின் மாணவன் சுமையை தினமும் கழித்துக் கொண்டே வருகிறான் ... ஒரு முனிவரிடம் போவது என்பது கற்றதைக் கழிக்கத்தான் ... ரமண மகரிஷியிடம் சென்றால் கற்றதை கழிப்பது எப்படி என்றுதான் கூறுவார் ... நீ நிறைய கற்றுக் கொள்ளும்போது உன்னையே நீ யார் என மறந்து விடுகிறாய் ... தேவையில்லாத விஷயங்களைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டு ... அவசியமான அறிவான உன் ஜீவனைப் பற்றி ஒன்றும் தெரியாமல் இருக்கிறாய் ... எதையும் கற்றுக் கொள்வது சுலபம் ஆனால் கற்றதைக் கழிப்பது சிரமம் ... கற்றுக் கொள்ளும் போது உன் மனதோடு அடையாளப் பட்டு போகிறாய் ... நீ மனதைக் கடந்து போகும் வரையிலும் எதையும் கழித்து விட முடியாது ... மனதுதான் நான் .. அறிவுதான் நான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய் ... மனதை விட்டு விலகி அதனோடு உன்னை அடையாளப் படுத்திக் கொள்ளாமல் ... இருப்பதற்குத் தான் எல்லா தியான முறைகளும் ஏற்பட்டன ... நீ மனதைக் கடந்து போனால்தான் உன் மனதில் ... என்ன நடக்கிறது என்பது உனக்குத் தெரிய வரும் ... அப்போதுதான் அங்குள்ள விஷயங்களை கழித்து விடுவது சாத்தியமாகும் ... கற்றதைக் கழித்து விடுவதே தினமும் கற்றுக் கொள்வதாகும் ... தினமும் ஒரு புத்தம் புதிய மனிதனாக மாறி விடு ... ஒன்றும் தெரியாத குழந்தையாக மாறி விடு ... ஓஷோ ... தாவோ மூன்று நிதியங்கள் ... பாகம் 3 ...

Comments

Popular posts from this blog

ALLAH = SHIVA

Sadhguru Jaggi Vasudev about truth