Kindness is the only key - OSHO
அன்புதான் வாழ்க்கையின்
மூலமும் முடிவும் ...
அன்பை தவற விடுகிறவர்கள் எல்லாவற்றையும்
தவற விட்டு விடுகிறார்கள்...
அன்பு என்பது ஒரு உணர்ச்சியோ
அல்லது ஒரு உணர்வோ அல்ல ...
அன்பு என்பது ஒரு நுண்மையான
சக்தி ...
அன்பு தன்னை உடல் மூலமாக
வெளிப்படுத்திக் கொள்வதே காமம் ...
அன்பு தன்னை மனம் வழியாக
வெளிப்படுத்திக் கொள்வது நேசம் ...
அன்பு தன்னை ஆன்மா வழியாக
வெளிப்படுத்திக் கொள்வது பிரார்த்தனை ...
நான்காவதாக அன்பு துரிய நிலையில்
வெளிப்படும்போது ...
சமாதியாகிறது , நிர்வாணமாகிறது ,
ஞானமடைகிறது ...
இந்த நிலை தான் பரவசநிலை
பேரானந்த நிலை ...
முதல் தளத்தில் காமத்தில் உடல்கள்
மறைந்து போக மனம் திறந்து கொள்கிறது ...
இரண்டாவது நிலையான காதலில்
மனம் மறைந்து போய் ஆன்மா மட்டுமே
இருக்கிறது ...
மூன்றாவதான பிரார்த்தனையில்
ஆன்மாவும் மறைந்து போய் ...
கடவுள் இருக்க வருகிறார் ...
நான்காவதில் துரியத்தில் கடவுளும்
மறைந்து போய் சூன்யமே மிஞ்சுகிறது ...
அந்த நிலையில் எல்லா இருமைகளும்
கழிந்து ஒருமையே நிற்கிறது ...
இதுவே அத்வைத நிலை ...
இந்த எல்லா பொக்கிஷங்களுக்கும்
அன்புதான் ஒரே சாவி ...
ஓஷோ ...
தாவோ மூன்று நிதியங்கள்
பாகம் 4 ...
Comments
Post a Comment